Select Page

“ பகவான் ஸ்ரீ சத்ய சாயி ”

உலகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்

1.நாத்திகர்கள்

2.ஆத்திகர்கள்.

 

“கண்களுக்கு தென்படுவது சத்தியம். சிருஷ்டியில் தென்படாதது ஒன்றுமில்லை”, என்பது நாத்திகம்.

“இந்த பௌதிக கண்களுக்கு தெரிவது மட்டுமன்றி திவ்ய கண்களுக்கு தென்படுவது இருக்கிறது” என்று தெரிவிப்பதே ஆத்திகம். “திவ்ய கண்களுக்கு தெரியும் ஆன்ம பதார்த்தமே அனைத்து பௌதிக உலகங்களுக்கும் மூலாதாரம்” என்பதே ஆத்திக சித்தாந்தம்.

சிருஷ்டியின் ஆதியில் இருந்தே நாத்திகர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் கருத்து வேற்றுமை இருந்து கொண்டு வருகிறது. நாத்திகர்கள் இன்னல்களுடன் கூடிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆத்திகர்கள் வாழ்வில் உயர்வை சாதித்து எப்பொழுதும் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்.

உண்மையான ஆத்திகத்தை உலகத்திற்கு எடுத்துரைக்க “மகான்கள்” அவதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் “பகவான் சத்ய சாயி” முதன்மையானவர். நாத்திகர்களை ஆன்மிக விஞ்ஞானிகளாக மாற்றுவதே அவரின் பிறவிப்பயன்.

அனைத்து இன்னல்களுக்கும், பயங்களுக்கும், போர்களுக்கும் காரணம் நாத்திகம். “தூய்மையான ஆன்மிகம்” என்பதே அனைத்து நலன்களுக்கும், சௌபாக்கியங்களுக்கும், சித்திகளுக்கும் மூலவிதை.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பகவான் சத்ய சாயியின் தியாகம் நிறைந்த வாழ்க்கையைக் கண்டு நாத்திகத்திலிருந்து, ஆத்திகத்துக்கு மாறி விட்டார்கள். பகவான் சத்ய சாயி அவர்களுக்கு பிரமட் ஆன்மிக மன்ற தியானிகள் சார்பிலும், என் சார்பிலும் கோடி வணக்கங்கள்.

தூய்மையான் ஆத்திகத்திலிருந்து இன்னும் முன்னுக்குச் சென்று சுயசித்தியை அடைய, ‘புத்தத்துவம்’ வழியைக் காண வேண்டும். பகவான் சத்ய சாயி காட்டிய வழியில் பயணித்து நாமும் தியாக உணர்வு பெற்ற மகான்களாக உருவாக வேண்டும். ‘சித்தத்துவம்’ என்பது நிரந்தர தியான சாதனையால் சாத்தியம். முதலில் ‘நாத்திகர்கள்’ அனைவரும் ‘ஆத்திகர்களாக’ மாற வேண்டும். பின்னர் ஆன்மிக விஞ்ஞானிகளாக உயர வேண்டும்.