Select Page

“ பத்ரிஜியின் பொன் மொழிகள் ”

மனித வாழ்க்கை உணவு, உடை, இருப்பிடத்திற்காக மட்டுல்ல. சங்கீதம், நடனம் மற்றும்
தியானத்திற்காகவும்தான். உணவு, உடை, இருப்பிடம் என்பது பெளதீகம். சங்கீதம், நடனம், தியானம் என்பவை ஆன்மிகம். சிவனின் கையில் உடுக்கை இருக்கின்றதே அதுதான் சங்கீதம். அவர் நன்றாக நடனம் ஆடுவார், தியானமும் செய்வார். பரமசிவனின் பரம மானுட வாழ்க்கை, மனிதனுக்கு ஒர் எடுத்துக்காட்டு. அவருடைய உடலின் பாதி பார்வதி. ஆனால் பார்வதி உடலில், ‘சிவன்’ பாதி இல்லை. ஆண்களிடம், பெண்களின் லட்சணங்கள் இல்லையென்றால் ‘முழுமை’ ஆகமாட்டார்கள். பெண்கள் தங்களில் தாங்கள் சம்பூர்ணம். ஆண்கள் குறைவான உணர்வுநிலை உடையவர்கள். பெண்களிடமிருந்து சாந்தம், பொறுமை, அங்கீகாரம் (வாத்சல்யம்) எதையும் எதிர்பார்க்காத அன்பு என்ற குணங்களை சம்பாதித்தால்தான் ஆண்கள் சம்பூர்ணம் ஆக முடியும். அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் என்றால் இதுதான். எந்தப் பெண்ணுக்கும் ஆண்களின் லட்சணங்கள் தேவையில்லை. நாம் சிவனைப் போல தியானம், சங்கீதம், மற்றும் நடனம் கற்றுக் கொள்ள வேண்டும்.

“பரமசிவன் தத்துவம் என்றால்… அவரிடம் உள்ள திரிசூலத்தில் மூன்று குறிகள் உள்ளன. முதலாவது தியானம், மற்றவை “சுவாத்யாயம்” மற்றும் “சத்ஜனசாங்கத்யம்”. சிவனின் தலைமீது பெரிய கங்கை இருக்கும்; அந்த கங்கை உயிர் சக்தி. தியானம் செய்வதனால் அபாரமான உயிர் சக்தி…. அண்டப் பேராற்றல் நம்முள் பிரவாகிக்கும். சிவனது வாகனம் நந்தி. அப்படியென்றால் விலங்கு ஜாதிகளுடன் நட்பு என்று அர்த்தம். இவற்றை நன்றாகச் சிந்தித்துக் கற்றறிந்து கொள்ளுங்கள்” என பத்ரிஜி மொழிந்தார்.