Select Page

“ நீதி, நியமங்கள் ”

வாழ்க்கை எந்த ‘திசையை’ நோக்கிச் செல்ல வேண்டும்?

நீதி எனும் திசையை நோக்கிச் செல்ல வேண்டும்.

உண்மையில் மனிதனின் “வாழ்க்கை லட்சியம்” என்ன?

அன்றாட வாழ்க்கையை ‘நீதியுடன்’ வாழ்வதே மனிதனின் அடிப்படை “வாழ்க்கை லட்சியம்”.

வாழ்க்கை முழுவதும் ‘நீதியுடன்’ வாழ முயற்சிப்பதே மனிதனின் அடிப்படை “வாழ்க்கை லட்சியம்”.

மனிதனுக்கு “அடிப்படை வாழ்க்கை லட்சியம்” இருக்க வேண்டும்.

அது அன்றாடம் நம் கண்முன் தோன்ற வேண்டும்.

இன்று நீதியுடன் வாழ்வதே… “இன்றைய வாழ்க்கை லட்சியம்”.

நாளைகூட நீதியுடன் வாழ்வதே… “நாளைய வாழ்க்கை லட்சியம்”.

 

நீதி

‘நீதி’ என்றால் என்ன?

“அஹிம்சை” என்பதுதான் நீதி.

‘அஹிம்சையில்’ வாழ்வது ‘நீதியுடன்’ வாழ்வது.

பிறரைக் கட்டுப்படுத்துவது என்றால் அது “இம்சை”.

பிறரின் வாழ்க்கையில் அவர்களுக்கு விருப்பமில்லலாமல் நுழைவது “இம்சை”

பிறரைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதே “அஹிம்சை”… அதுவே “நீதி”

பிறரைக் கட்டளை இடாமல் இருப்பதே “அஹிம்சை”… அதுவே “நீதி”

அதிகாரத்தை, பலத்தை, தவறாகப் பயன்படுத்தி நம் விருப்பங்களைப் பிறரின் மேல் திணிப்பதே “இம்சை”.

நம்முடன் இருப்பவர்களுக்குச் சுதந்திரம் அளிப்பதே “நீதி”

‘நீதியைப்’ புரிந்து கொண்டு, அதுபோல் வாழ்வதே “மனிதத் தன்மை”

‘மனிதத் தன்மையுடன்’ வாழ்வதே ‘அடிப்படை ஆன்மிகம்’

 

நியமங்கள்

நியமங்கள் என்றால் என்ன?

“தியானம்”, “ஸ்வாத்யாயம்”, “சஜ்ஜன சாங்கித்யம்” என்பவை நியமங்கள்.

‘நீதியுடன்’ வாழ்க்கையில் ‘நியமங்களும்’ இருக்க வேண்டும்.

நீதி’, ‘நியமங்களுடன்’ வாழ்வதே மனிதனின் “பூரண வாழ்க்கை லட்சியம்”.

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் தவறாமல் இருக்க வேண்டியவற்றை “நியமங்கள்” என்கிறோம்.

தினமும் “தியானம்” செய்ய வேண்டும்.

தினமும் “சுவாத்யாயம்” செய்ய வேண்டும் (சரியான ஆன்மிகப் புத்தகங்கள் படித்தறிதல்).

தினமும் “தியானிகளுடன், ஞானிகளுடன்” அவர்கள் அனுபவங்களைக் கேட்டறிதல் வேண்டும்.

“நீதி’, ‘நியமங்கள்’ இல்லாத வாழ்க்கை எந்திர வாழ்க்கை.

‘நீதி’, ‘நியமங்களுடன்’ வாழ்க்கையை முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது நீதி. இது நியமும்..