Select Page

“ நம் அஹிம்சை தர்மத்தின் மகத்துவம்! ”

என் ஒரே ஒரு வேண்டுதல்… என் மிகப்பெரிய கனவு…

“அஹிம்சை நிறைந்த பூமி”யைக் கண்களால் முழுமையாகக் கண்டு களிக்க வேண்டும்.

தற்போது பூமி ஒரு பெரிய நரக வீடாக உள்ளது.

உணவுக்காக விலங்குகளை, பறவைகளை, மீன்களை மிகக்கொடூரமாகக் கொன்று தின்னும் மனிதர்களின்

காட்டுமிராண்டித்தனமான, கட்டுக்கடங்காத அநியாயச் செயல்களைக் கண்டு துடித்துப் போகிறாள் ’பூமி அன்னை’.

சோகத்திலிருக்கும் ’பூமி அண்னையைக்’ குணமாக்கும் பொருட்டு

’பூமி அன்னை’யின் பிள்ளைகளான நாமனைவரின் கடமை.

இமயமலையைப் போன்று வளர்ந்து கொண்டிருக்கும் உலக மக்களின் மனிதத் தன்மையற்ற இராட்சத வேலைகளிலிருந்து,

’பூமி அன்னையைக்’ காப்பதே நம் வாழ்வின் லட்சியம்.

’பூவுலகம்’ இனி ஒரு ’மஹாசொர்க்கமாக’ ஆக வேண்டும்.

அதற்காகத் தியானப் பிரச்சாரத்தை,

சைவ உணவுப் பிரச்சாரத்தை இன்னும் மும்முரமாகச் செய்ய வேண்டும்.

ஏனெனில்,

’தியானம்’, ’சைவவுணவு’ மூலம் மட்டுமே ஒவ்வொருவரும்

தமக்குள்ளிருக்கும் தெய்வதத்துவத்தைத் தெரிந்து கொள்கின்றனர்.

மேலும், ’திவ்யஞானப் பேரொளி’ பெற்றவர்களே, இம்சிக்கும் கொடூரச் செயல்களிலிருந்து வெளியில் வருவார்கள்.

’அனைத்து விலங்கினங்களும் நம்மைப் போன்று ஆன்ம சொரூபங்களே’ என்று மக்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.