Select Page

“ நானும் என் புல்லாங்குழலும் ”

என் குழந்தைப் பருவத்தில் என் குடும்பத்தில் இசையும், பஜனைப் பாடலும் நிறைந்திருக்கும்.

என்னுடைய தாயார் பஜனைப் பாடல்கள் பாட்வதில் வல்லவர். ஆனால் அவர் தன்னுடைய சிறு வயதில் முறைப்படி சங்கீதம் கற்க இயலவில்லை. அதனால் தன்னுடைய குழந்தைகள் நன்கு சங்கீதம் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

என்னைவிட ஆறு வயது மூத்த என் சகோதரர் திரு.வேணுவிநோத் புல்லாங்குழலை’த் தேர்ந்தெடுத்தார். போதன் என்ற ஊரில்மேல்நிலைப் பள்ளியில் ’ஸ்கவுட்ஸ்’ பிரிவில் சேர்ந்திருந்தபோது அவர் இவ்வாறு தனது இசைக்கருவியாகக் குழலைத் தேர்ந்தெடுத்தார்.

பிறகு, அவர் இஞ்சினியரிங் படிக்க ஹைதராபாத் சென்றிருந்தபோது ஒரு ரெயில்வே ஊழியரான திரு.டி.எஸ். சந்திரசேகரன் என்பவரிடம் முறையாகக் கர்நாடக சங்கீத குழலிசையைக் கற்றுக் கொண்டார். திரு.டி.எஸ். சந்திரசேகரன் புகழ்பெற்ற ’குழல் வித்வான்’ மாலி என்றழைக்கப்படும் திரு.டி.ஆர். மஹாலிங்கம் அவர்களிடம் நேரடி சிஷ்யனாகப் பயிற்சி பெற்றவர்.

நானும் 9ஆம் வகுப்புவரை போதன் மேல்நிலைப் பள்ளியில் படித்தபிறகு மேற்படிப்பிற்காக ஹைதராபாத் சென்றேன். 1962-63ல் நான் 12ம் வகுப்பு படிக்கும்போது என்னுடைய சகோதரர் என்னை ’தபலா’ எனும் இசைக்கருவி பயில அந்த வகுப்பில் சேர்த்துவிட்டார். நானும் ஒரு வருடம் அதை மிக ஆர்வமுடன் கற்று வந்தேன்.

ஒரு வருடம் கழித்து என்னுடைய சகோதரர் என்னைத் தனது குரு, திரு.டி.எஸ்.சந்திரசேகனிடம், ’புல்லாங்குழல்’ கற்றுக் கொள்வதற்காகச் சேர்த்தார்.

1963ஆம் வருடம் ஏப்ரல் மாதம்தான் என்னுடைய ’குழல்’ படிப்பின் ஆரம்பமாக அமைந்தது. அதன்பிறகு தொடர்ந்து ஐந்தாறு ஆண்டுகள் நான் திரு.டி.எஸ்.சந்திரசேகரன் குருவிடம் புல்லாங்குழல் கற்று, பயிற்சி செய்து வந்தேன். நானும், என் சகோதரரும் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தோம்.

பிறகு 1974ஆம் வருடம் என்னை ஆந்திரப் பிரதேசம் முழுவதும் ’குழல் கச்சேரி’ செய்யும் மாபெரும் கலைஞனாகப் பாராட்டிப் புகழ்ந்தது. என்னுடன் இணைந்து P.V.S.S சாஸ்திரி என்ற கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கலைஞரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். பிறகு அவர் ’விஜயநகரம்’ மஹாராஜா இசைக்கல்லூரியின் முதல்வர் ஆனார். அக்கல்லூரி விஜயநகரத்தின் புகழ்பெற்ற இசைக்கல்லூரி ஆகும்.

பிறகு 1975ல் M/S. கோரமண்டல் உரக் கம்பெனியில் நான் பணியில் சேர்ந்தேன். அதுவும் விற்பனைப் பிரிவில், விற்பனையை அதிகரிக்கும் அதிகாரியாக்! என்னுடைய தலைமை அலுவலகம் கர்னூலில் இருந்தது.

1975ஆம் வருடம் நான் கர்னூல் போய்ச் சேர்ந்தேன். ஆந்திரப் பிரதேச மாகாணத்தின் புகழ்பெற்ற கர்நாடக இசை வல்லுநர் திரு. பத்மபூஷன் டாக்டர். ஸ்ரீபாத பினாகபாணியின் சொந்த ஊராக கர்னூல் இருந்தது எனது நல்லதிர்ஷ்டமே.

கர்னூல் வந்த 15 நாட்களிலேயே நான் அந்தப் புகழ்பெற்ற மேஸ்ட்ரோ இசைஞானியின் முன்பு சென்று, என்னை நானே ஒரு இசை மாணவனாக அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய உண்மையான இசை ஆர்வத்தை உணர்ந்த அவர், எனக்கு ’இசை’ போதிக்க தீர்மானித்தார்.

1975ஆம் ஆண்டு முதல் 1978 வரை அந்த மாபெரும் இசைக்கலைஞரிடம் நான்
குழல் பயின்று என்னுடைய குழல் வாசிப்பிற்குப் புதிய வண்ணம் கொடுத்து வந்தேன். அங்குதான் நான் ’வாய்ப்பாட்டு’ பயிற்சியும் ஓரளவு பயின்று, என்னை மேம்படுத்திக் கொண்டேன்.

1979ஆம் வருடம் மாபெரும் ’தியானக் கலை’ என்னை ஈர்த்தது. மெது மெதுவே என்னுடைய ஆர்வம் ’இசையிலிருந்து’ தியானத்திற்க்கு மாறத் துவங்கியது. குரு ஸ்ரீ பாத பினாகபாணி குருவிடம் பயிற்சி பெறுவதை நிறுத்தி ’தியானம்’ பயில்வதை ஆரம்பித்தேன். ’இசை’ வகுப்பிற்குச் செல்வதை முழுமையாக விட்டுவிட்டேன். என் அலுவலக வாழ்க்கை, குடும்பம், தியானம் என்று வாழ்வு ஆகிவிட்டது. ஆன்மிகம்ஆன்மிக விஞ்ஞானம் இதைத்தவிர என் வாழ்வில் வேறு எதற்கும் இடமில்லாமல் போனது.

1995ஆம் வருடம் துவங்கி என்னுடைய தியான அமர்வுகளில் நடுநடுவே குழல் இசையை இசைக்க ஆரம்பித்தேன். ஆழ்ந்த தியானத்தின் அடர்வை மேன்மைப்படுத்த வாய்ப்பாட்டு பாடுவதும் உண்டு.

1998ஆம் ஆண்டிலிருந்து ’தியான அமர்வுகளில்’ இசையைக் கலந்து விடுவது எனது வழக்கமாயிற்று. அப்பொழுது நான் உணர்ந்ததாவது: ’இசை தியானத்தை அழகாக மேம்படுத்துகிறது’ என்பதுதான். நான் மட்டுமல்ல, தியானம் செய்த ஒவ்வொரு தியானியும் இதை அங்கீகரித்தனர்.

பிறகு என்னுடைய எல்லா தியான வகுப்புகளிலுமே புல்லாங்குழல் இசை இடம் பெறலாயிற்று.

இதை எல்லாம்விட ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் என்னுடைய குரல்வளம் மிகவும் உன்னதமாயிற்று! முக்கியமாக ’ஹிந்துஸ்தானி இசை’ உச்சங்கள் எனது பாடல்களில் மிக இனிமையாக வெளிப்பட்டன! என்னுடைய குரு ஸ்ரீ பினாகபாணி அவர்கள் மிக ஆச்சாரியத்துடன் கேட்பார். “நீ எப்பொழுது இந்துஸ்தானி இசை கற்றாய்?” என்று. இதற்கு பிதில், “நான் என் சென்ற ஜன்மங்களில் காட்டாயம் இந்துஸ்தானி இசை வல்லுனராய் இந்திருக்க வேண்டும்” என்பதே!

இசையை தியானத்திற்கு பயன்படுத்தும் முன்பு இசை இசைக்காக் மட்டுதான் என்று நம்பி இருந்தேன். ஆனால் இசை, முக்கியமாக எனது இசை தியானத்திற்கானது என்று அறிந்து கொண்டேன். இதில் ’பெருமகிழ்வும் அடைந்தேன்’ என்றால் அது மிகையல்ல.

“வாழ்க இசை தியானம்
வளர்க இசை தியானம்”