Select Page

“ கடவுள் யார்? எங்கிருகிறார்? ”

அனுதினம் நாம் பேசும் சில வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தமே தெரியாது. அவ்வாறு நாம் அர்த்தம் தெரியாத வார்த்தைகள் பேசுகிறோம் என்றால், அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கின்றோம். வாழ்க்கையே விரயமாகிறது. “அர்த்தமற்ற வேலைகளில் பலன் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, செய்யும் எந்த ஒரு செயலானாலும், சொல்லும் சொல்லானாலும் பலன் கொடுக்க வேண்டும்”. சொல்லின் பொருள் தெரிந்து கொள்ள நாம் இப்பொழுதே அடிக்கல் நாட்டுவோம்.

கோபகுணமுள்ளவரை, ‘கோபக்காரர்’ என்கிறோம்.

அகங்காரம், பெருமை போன்ற குணமுள்ளவரை  ‘அகங்காரர்’ என்கிறோம்.

பலம் உள்ளவரை ‘பலசாலி’ என்கிறோம்.

தனம் உள்ளவரை ‘தனவான்’ என்கிறோம்.

சத்குணம் உள்ளவரை ‘குணவான்’ என்கிறோம்.

பாக்கியம் செய்தவரை ‘பாக்கியவான்’ என்கிறோம். இவற்றிலிருந்து “பகவான்” என்ற சொல் வந்துள்ளது.

‘பாக்கியம்’ என்றால் ஸ்ரேயசு. ஸ்ரேயசு என்றால் ஆன்மபூர்வமான, விசேஷமான, ஆன்ம பரிணாம வளர்ச்சியில் உச்ச நிலையை அடைந்திருப்பதே “ஸ்ரேயசு”.

ஆத்ம ஞானம் மற்றும் பிரம்ம ஞானமே ஆத்மாவின் நித்திய ஸ்ரேயசிற்கு துணையாவது.

“பிரம்ம ஞான அனுபவம்” இருப்பவரே பாக்கியவான். இப்படிப்பட்ட பாக்கியவான் குறித்து அனுதினம் சிந்திப்பவரோ “பாகவதர்”.

நீங்கள் இதுவரை பாகவதர்கள். இனிமேல் “பகவான்” என்ற பாக்கியவான் ஆகுங்கள். அப்படியென்றால் பரிபூரண செளபாக்கியத்தை அடையுங்கள், என்று பொருள்.

இதுவரை நீங்கள் வேறு, “பகவான்” வேறு என நினைத்துக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தெரிந்து கொண்டது என்னவென்றால் பகவானாக மாற ஒரு மார்க்கம்தான் இருக்கிறது.

பிரம்மம் என்பது வேறு தேசத்தில் இல்லை.

பிரம்மம் என்பது தன்னுள் இருக்கிறது.

தன்னைத்தான் அறிந்தால், அதுவே “பிரம்மம்”. – யோகி வேமனா கூறியிருப்பது.

அதாவது “பிரம்மம்” என்பது அயல் தேசத்தில் இருக்கிறது என நினைக்கக் கூடாது. “பிரம்மம்” என்பது தோன்றுவது. தன்னைக் குறித்து நன்றாகத் தெரிந்துக் கொண்டால், அது பிரம்மம். தன்னை பிரம்மப் பொருளாக தெரிந்து கொள்வதே பிரம்ம ஞானி ஆவதாகும். “பிரம்மப் பொருள்” என்றால் “சக்தி, சைதன்யம், ஞானத்தின் கலவை”

 

You are SPEC of ‘E’, ‘C’, ‘W’

E = Energy – சக்தி, ஆற்றல்

C = Consciousness – சைதன்ய நிலை – உணர்வுநிலை

W = Wisdom – ஞானம்

 

இதுவரை படித்தது பலருக்கு ஆச்சரியமாகவும், சிரிப்பாகவும் தோன்றும். ஏனென்றால் அனைவரும் “நம் பெளதிகக் கண்களுக்குத் தெரிவனதான் சத்தியங்கள்”, “தமக்கு தெரிந்ததே சரி” என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்கள்.

“சத்தியங்கள் என்பவை எப்பொழுதும் அனுபவங்கள் வாயிலாகத் தெரியவரும். நதிநீர் மேலோட்டமாக சஞ்சலம் இன்றி தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கும். அதைப்போலத்தான் சத்தியம்.”

“எத்தக்ரே விஷமீவ பரிணாம ம்ருதோபமம்” “முதன்முதலில் விஷமாகத் தெரிவது முடிவில் அமிர்தமாக மாறிவிடுகிறது” என்று பகவத்கீதை சொல்கிறது.

யுகயுகமாக எத்தனையோ மகாயோகிகள் “நீயே தெய்வம்”, “தெய்வம் முழுமையாக வியாபித்துள்ளாது”, “கடவுள் உன்னுள்ளேயே இருக்கிறார்” என்று அவரவர் அனுபவங்களின் சாராம்சத்தில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த சத்தியங்களை கடைப்பிடிக்காமல், மனிதர்கள் வாழ்வை அர்த்தமில்லாததாக ஆக்கிக் கொள்கிறார்கள். சத்தியங்கள் யாவை?

பரிபூர்ணவா பராத்மஸ்மின் தேகே வித்யாகி காரிணி

புத்தே சக்ஹித்தயா சித்வா, சுபர்ணஹா மிதிர்யதே”. – யஜுர் வேதம்

“இந்த சரீரத்திலிருந்து பரிபூர்ணமாக பரமாத்மாவில், புத்திக்கு காட்சியாக, இருந்து பிரகாசிப்பவன் ‘நான்’ எனச் சொல்கிறான்”

“ஆத்ம ஹயாமானோ நாதக் ஆத்மா ஷீயாத்மனேகதிகி” – புத்தர்

ஆன்மாவிற்கு ஆத்மா பிரபுஆத்மாவிற்கு ஆத்மா கதி. அதாவது, அவரவருக்கு அவரவரே ராஜா, ஆவரவருக்கு அவரவரே கதி”

“உபாத்தாவுடானு மாந்தாசா பக்தாபோத்தா மகேஷ்வரஹ

பரமாத்மோதி சாப்யுக்யோத் தேஹேஸ்மின் புருஷன பரஹ்”. – பகவத்கீதை

“ஆத்மா இந்த சரீரத்தில் இருந்தாலும் சரீரமற்ற இன்னொருவன், காட்சியாக இருப்பவன் அனுமதிப்பவன், அனுபவிப்பவன் தாங்கிக் கொள்கிறவன், “பரமேஸ்வரன்”, “பரமாத்மா” என்று கூறப்படுகிறது. மேலான பிரபு, நியமிப்பவரே ‘பரமாத்மா’ என்று சொல்லப்படுகிறார்.”

“கடவுளின் இராஜ்ஜியத்தில் தேடுங்கள், தேவையானது தானாக உங்களிடம் வந்து சேரும். கடவுளின் இராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” – இயேசு (மத்தேயு 6:33)

“உயர்ந்த, மெளிப்படையான சத்தியங்கள் புரிவதற்கு சிறிது காலம் தேவைப்படும். அனைவரும் புத்தத்துவ சக்தியைப் பெறுவதற்கு உகந்தவர்களே” என்பதே இருக்கும் சத்தியங்களில் மேலானது. – ஒஷோ ரஜனீஷ்

சிலையைப் பார்த்து சிவன் என நினைத்துக் கொள்கிறார்கள் மனிதர்கள் சிலைகள் சிலைகளே தவிர சிவன் கிடையாது. தன்னுள் இருக்கும் சிவனைத் தானே ஏன் கண்டுகொள்ளவில்லை? விஸ்வதாபி ராமா விணுர வேமா.” – வேமனா

ஆன்மாவே அனைத்து தேவர்களின் ஸ்வரூபம்” – மனு

சிறிய கற்களை வணங்கிக் கொண்டிருந்தால் மனது கெட்டு விடும். மனதில் இருக்கும் “சின்மய ஜோதியைப்” பார்ப்பது நல்லது. நான் கண்டேன் பிரம்மத்தை என்னுள்ளே. நான் கண்டேன் சத்குருவை என்னுள்ளே” – ஸ்ரீ வீரபிரம்ம ஸ்வாமி

“ஆத்மாவிற்கு ஆத்மாவே சுவாமி – பிரபு, அன்னியர்கள் எப்படி பிரபு ஆவார்கள்? ஆத்மா மூலமாகவே மனிதன் அருட்பெருஞ்ஜோதியை அடைகிறான்” – மகா காலன்

“பெளதிக சரீரத்தை அனுபவிக்கும் ஜீவன் – பிரம்மத்தின் பிரதி பிம்பம்.

“அந்த உயிர் ஈஸ்வரன். தன்னைவிட உயர்ந்தவன்”

என நினைத்துக் கொள்கிறது. அனுபவம் மூலமாக ‘நானே பிரம்மம்’ என்று தெரிந்து கொண்டபின், அனைத்து கர்ம பந்தங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது”. – ஆதி சங்கராச்சாரியார்.