Select Page

“ ஞான பதம் ”

அனைத்து இடங்களிலும் துன்பம் பரவி இருக்கிறது.

இது முதலாவது சத்தியம்

துன்பம் என்பது “துர்ஷணை”யிலிருந்து பிறக்கிறது… இது இரண்டாவது சத்தியம்.

துர்ஷ்ணை என்றால் அறிவை மறைக்கும் “மோகம்”

துர்ஷ்ணை என்றால் தேவைகளுக்கு மீறிய ‘ஆசைகள் – பேராசை’

துர்ஷ்ணை என்றால் மிதமிஞ்சிய ‘அதி ஆசை’

துர்ஷ்ணை என்றால் ‘ஆதி’யின் விஸ்வரூபம்

துர்ஷ்ணை என்பது அவித்யையினால் பிறக்கிறது..

இது மூன்றாவது சத்தியம்

ஆன்மிக கல்வியின்மையை ‘அவித்யை’ என்கின்றோம்

அவித்யையை “அஷ்டாங்க மார்க்கத்தினால்” போக்க முடியும்…

இது நான்காவது சத்தியம்

அஷ்டாங்க மார்க்கம் என்றால், சரியான எண்ணங்கள், சரியான கோரிக்கைகள், சரியான வார்த்தைகள், சரியான சம்பாத்தியம், சரியான நடவடிக்கைகள், சரியான கவனம், சரியான சேமிப்பு, கடைசியாக, சரியான தியானத்தோடு கூடிய… பூரண ஆன்மிக சாதனை முறை.

இயற்கை என்பது எப்பொழுதும் மாற்றத்துடன் இருக்கும். நாமும் நொடிக்குநொடி மாற்றத்துடன் இருக்கும் இயற்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.