Select Page

“ வெற்று மனம் ”

இந்திய நாட்டின் தொன்மைக்கால ஞானிகள் ஓயாத மன அலைகளைச் “சித்தம்” என்று அழைத்தார்கள். அதனால் பதஞ்சலி முனிவர் யோகாவை, “சித்த விருத்தி நிரோதனம்” ஓயாத அலைகள் கொண்ட மனத்திற்குத் தடை ஏற்படுதல் – இதுவே “யோகா” என்றார்.

மனிதனின் ஓயாத மன அலைகளால் இடைவிடாது துயரம் நேர்கிறது. ஓயாத மன அலைகளால் ஆன்மாவின் சக்தி தேவையில்லாமல் வெளியேறுகிறது. இது போன்று ஆன்ம சக்தி வெளியேறுவதால், நம் உடல் பலவீனமாகி, வெளிக் காரணிகளின் தாக்கத்திற்கு உட்பட்டு, நோய்வாய்பட்டு, விரைவில் முதுமை நெருங்கி, இறக்கவும் நேர்கிறது.

ஓயாத மன அலைகளால் கையில் இருக்கும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாது
நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. எவ்வளவு ஓயாமல் மனம் அலைகிறதோ, அவ்வளவுக்கு ஒரு வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. பண்படுத்தபடாத மனமே ஓயாமல் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இயற்கையிலேயே, “ஓயாத மனம்” என்பது, மனத்தைக் பண்படுத்தாததால் உண்டாகின்றது, எவ்வாறு பண்படாத நிலம் களை செடிகளாக உள்ளதோ அதுபோல பண்படாத மனமும் தேவையற்ற எண்ணங்களால் நிரப்பப்பட்டுள்ளது.

மனத்தின் ஓயாத அலைகளைக் குறைப்பதற்கு ஒரு பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் பணியில் எவ்வளவு கவனம் செலுத்துகின்றாரோ அவ்வளவு அவரது மனம் பண்படுத்தப்படுகிறது. அதன் மூலமாக மனம் சிறிது ஓய்கிறது. அதன்மூலம் மனம் அமைதி அடைகிறது. அதன் மூலமாகச் சரீரத்தின் சக்தி வீணாகாமல் இருக்கும்.

தியானம் முதலில் பழகும்பொழுது, ஓயாத, பயனில்லாத மன அலைகளின் வேகத்தைக் குறைக்கும். விரைவில் ஆழ்ந்த, ஓய்ந்த, நிலையை மனம் அடைகிறது, அதன் மூலம் பயனில்லாத மன அலைகள் முற்றிலும் நின்றுவிடும்.

தியானம் மூலமாக படிப்படியாக முற்றிலுமாக மனதை ஓய்வுபடுத்த முடியும். இதை அடைவதற்கு மனம், சுவாசத்தின்பால் கவனம் செலுத்த வேண்டும்.

மனம் எப்பொழுது சுவாசத்திலே நிலைக்கிறதோ, அதனைத் தொடர்ச்சியாகச் செய்து வரும்பொழுது, ஓர் அழகான நிகழ்வு ஏற்படுகிறது. ஓயாத மன அலைகள் முற்றுப்பெறுகின்றன. ஒரு அமைதியான, சாந்தமான சலனமற்ற மனம் உருவாகிறது. மனம் வெற்றிடமாகின்றது.

மூச்சைக் கவனிக்க, கவனிக்க, மனம் முற்றிலுமாக வெற்றிடமாகின்றது. ஓயாத, தேவையற்ற எண்ணம் அறவே தோன்றாது, மனம் வெற்றிடமாகும் பொழுது, அதிக அளவில் பிரபஞ்ச சக்தி உடலில் பாய்கின்றது. மனம் எவ்வளவு வெற்றிடமாகின்றதோ அவ்வளவு பிரபஞ்ச சக்தி உடலில் நுழைகிறது.

 

காணுதல்….. “பார்த்தல்”

நம் பூத உடலில் பிரபஞ்ச சக்தி நிறைந்த பின்னர் நடக்கும் இயற்கையான பெரும் மாறுதலே “காணுதல்” ஆகும்.

உண்மையான தியானி காணத் தொடங்குகிறார். முதலில், பரவசமூட்டும் அழகான இயற்கையைக் காணத் துவங்கி, இதுவரை காணாத மற்றும் அனுபவிக்காத நிலை ஏற்பட்டு, தன் முற்பிறவிகளையும் காண முடிகின்றது.

 

“உள் உணர்வுகள்”

உள்ளே ஆழ்ந்த அமைதி அடையும் பொழுது, வெளி உணர்வுகள் அனைத்தும் உள்நோக்கிச் செல்கின்றன. இதன் மூலம் வெளி உணர்வுகள் “உள் உணர்வாக” மாறுகிறது. “உள் உணர்வுகள்: மூலம் உள் உலகங்களை” உணர முடிகிறது. உள் உலகங்களில் வெவ்வேறு அலைவரிசை உள்ளன. தியானத்தின் பலன் கொண்டு உள் உணர்வைத் தூண்டுவதன் மூலம், உள் உலகங்களைத் தரிசிப்பதும், அதன் மூலம் உள் உலகில் உறையும் ஆசான்களைச் சந்திப்பதும் நிகழும்.

ஆன்மிக அறிவை உள் உலக ஆசான்களின் கற்பித்தல் மூலம் அடைவோம். எவ்வளவு தியானம் செய்கிறோமோ அவ்வளவு ஆன்மிக அறிவு அடைவோம். எவ்வளவு ஆன்மிக அறிவு பெறுகிறோமோ அவ்வளவு ஆரோக்கியம், திடம் மற்றும் சக்தி, பௌதிக உடலில் நிறையும்.

 

“மற்ற மெய்கள்”

இப்பொழுது தெரியப்படும் மெய்களைத் தவிர பிற உண்மைகளும் உண்டு. ஒவ்வொரு மெய் மண்டலமும் ஒவ்வொரு அலைக்கற்றையில் உள்ளது. ஒவ்வொரு அலைக்கற்றை மெய்யும் எண்ணிடலங்கா அண்டம் ஆகும். இதுபோன்று பிரபஞ்சத்தில் எண்ணற்ற அலைக்கற்றை அண்டங்கள் உண்டு.

ஒவ்வொரு நொடியிலும், ஒரு ஆன்மாவானது, ஒரு அலைக்கற்றை மண்டலத்துடன் இணைந்திருக்கும், அதுவே அந்த ஆன்மாவில் ஒரே மெய்யாக உணரப்படுகிறது.

தியானம் மூலமாக, ஆன்மா, “ஆன்மிக அறியாமைக்” கூண்டிலிருந்து விடுபடுகிறது. புது மெய் மண்டலங்களை நுகரமுடிகின்றது. அதிக தியானம் மூலம் ஏற்படும் சுய நுகர்தலால், புரியும் தன்மை, கிரஹித்துக் கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது. இவ்வாறு மாபெரும் பிரபஞ்சத்தின் “தத்ரூப மெய்யை” உணர்தலே “மெய் ஞானம்” ஆகும்.