Select Page

“ தியானமும் சைவமும் ”

ஆன்மிகத்தின் இரு கண்கள் அமைதியான வாழ்விற்கு, இன்றியமையாதவை இரண்டு விஷயங்கள் உண்டு – அவைதான்  தியானமும் சைவமும்! இவற்றை இருகண்கள் போல் பாவித்து, நம் வாழ்வில் சேர்த்துக் கொள்வது மிக முக்கியம்.

 

1) தியானம்

“அஹிம்ஸோ பரமோ தர்மஹ” – அஹிம்சை தான் தர்மங்களின் தலையாயது – இது ஆன்றோர் வாக்கு. “மற்ற உயிர்களை வதைத்து – கொன்று, தின்று தன் உடல் வளர்ப்பவனுக்கு ஒருபோதும் அறக்கடவுள் அருள் கிட்டாது” வள்ளுவர் உரைக்கவில்லையா? தியானம் என்பது சிறந்த தர்மமாதலால் அது அஹிம்சை மார்க்கத்தை நமக்கு எளிதில் காட்டவல்லது. நம்மை தர்ம வழியில் வாழவைக்கும் அளவற்ற ஆற்றல் தியானத்திற்கு உண்டு. தியானியானவன் ஒருபோதும் தர்மத்தைவிட்டு விலகமாட்டான்.

 

2) சைவம்

நாம் உண்ணும் உணவுதான், நம் உடலை, உணர்வுகளை, குணாதிசயங்களை, உணர்வுநிலையை வளர்க்கின்றது.

வெவ்வேறு உணவுப் பொருட்களுக்கு, வெவ்வேறு குணங்களைத் (தமோ, ரஜோ, சாதவிக்) தூண்டும் சக்திகள் உண்டு. நாம் உண்ணும் உணவு சாத்விகமாக இருப்பின், எந்தவித கஷ்டமும் இல்லாது, ஆன்ம பலம் ஏற்பட்டு, ஆன்மிக முன்னேற்றமும் – முக்தியும் அடையலாம்!

அசைவ உணவு மனிதனுக்கு உகந்து உணவே அல்ல. அவன் உடற்கூறுக்கு, ஏற்ற உணவே அல்ல. அசைவ உணவு அதர்ம உணவு சத்தான, தாவர உணவையே, மிதமான அளவு உட்கொள்ள வேண்டும்.

 

தியானம் + சைவம் = முதற்கண் தர்மங்கள்…… தர்மத்தின் இருகண்கள்